» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடு முழுவதும் 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்தலாம்: உள்துறை அமைச்சகம் அனுமதி!!!

புதன் 20, மே 2020 4:54:35 PM (IST)

நாடு முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்திக் கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் நடத்தப்படாமல் இருக்கும்  10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்திக் கொள்ள, ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதே சமயம், சமூக இடைவெளி மற்றும் முகக் கவசங்கள் கட்டாயம் போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பள்ளிகளை திறப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில், மாநிலப் பாடத்திட்டங்கள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பாடத்திட்டங்களில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை நடத்த முடியாமல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.பொதுத் தேர்வுகளை நடத்திக் கொள்ள அனுமதி கேட்டு மாநில அரசுகள் மற்றும் சிபிஎஸ்இ தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு ஊரடங்கு காலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை நடத்திக் கொள்ள தளர்வு அறிவிக்கப்படுகிறது.வர திட்டம்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory