» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இனவெறி, எச்சில் துப்புதல் போன்ற சம்பவங்களால் 185 செவிலியர்கள் ராஜினாமா?

புதன் 20, மே 2020 4:40:13 PM (IST)

இனவெறி, எச்சில் துப்புதல் போன்ற சம்பவங்களால் மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் ராஜினாமா செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேற்கு வங்கத்தில் கரோனா பாதிப்புக்கு 2,961 பேர் தீவிர சிகிச்சை பெற்றும், 1,074 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியும் உள்ளனர்.  இதுவரை 250 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் நாட்டில் அதிக பலி எண்ணிக்கையில் மராட்டியம், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு அடுத்து 4வது இடத்தில் மேற்கு வங்காளம் உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவமனைகளில் செவிலியர்களாக பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர்.  இவர்களில் மணிப்பூரை சேர்ந்த செவிலியர்கள் 2 ஆயிரம் பேர் வரை பணிபுரிகின்றனர்.  இதனை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கரோனாவுக்கு எதிரான போரில் பின்னடைவாக, செவிலியர்கள் பலர் கடந்த வாரம் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.  மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்துள்ளனர்.  இந்த சூழலில், ஒரே நாளில் அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டு சொந்து ஊருக்கு சென்று விட்டனர். இதேபோன்று பிற வடகிழக்கு மாநில செவிலியர்களும் மற்றும் ஒடிசாவை சேர்ந்த செவிலியர்களும் ராஜினாமா செய்ய கூடும் என கூறப்படுகிறது.  அதிக எண்ணிக்கையில் செவிலியர்கள் பணியில் இருந்து விலகியதற்கான சரியான காரணம் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.  இதனால் மருத்துவ பணியில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இந்த சூழலில் ஊர் திரும்பிய செவிலியர்களில் ஒருவரான கிறிஸ்டெல்லா என்பவர் கூறும்பொழுது, எங்களது பணியை விட்டு சென்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை.  ஆனால், பணியில் இருந்தபொழுது இனவெறி, வேற்றுமை போன்றவற்றை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  மக்கள் சில நேரங்களில் எங்கள் மீது எச்சில் துப்ப கூட செய்தனர்.  எங்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் பற்றாக்குறையாக இருந்தன.  நாங்கள் செல்லுமிடங்களில் எல்லாம் மக்கள் எங்களிடம் கேள்வி கேட்டு வந்தனர் என வருத்தமுடன் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory