» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 10:47:51 AM (IST)

அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. 24 மருந்துப் பொருட்களின் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கி உள்ளது. 

கரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா அதிக அளவில் வாங்கி வருகிறது. இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹைட்ராக்ஸி குளோராகுயின் உள்பட மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்தது. 

இதனால், அமெரிக்கா ஹைட்ராக்ஸி குளோராகுயின் மருந்துகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், அமெரிக்கா ஏற்கனவே ஆர்டர் செய்த ஹைட்ராகிஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

இந்த நிலையில், இது தொடர்பாக மீண்டும் கருத்துக் கூறிய டிரம்ப், நாங்கள் ஏற்கனவே ஆர்டர் செய்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பும் என்று நம்புகிறேன். அவ்வாறு செய்யவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம்’ என்று மறைமுக மிரட்டல் விடுத்து இருந்தார்.  இதன் தொடர்ச்சியாக,  இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும், கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

இந்நிலையில், 24 மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியிருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டினிடாசோல், மெட்ரோனிடசோல், அசைக்ளோவிர், வைட்டமின் பிஐ, வைட்டமின் பி 6 மற்றும் வைட்டமின் பி 12 உள்ளிட்ட மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory