» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனாவுக்கு எதிரான நீண்ட போரில் நாம் சோர்ந்து விடக் கூடாது- பிரதமர் மோடி பேச்சு

திங்கள் 6, ஏப்ரல் 2020 5:52:08 PM (IST)

கரோனாவுக்கு எதிரான நீண்ட போரில் நாம் சோர்ந்து விடக் கூடாது என பாஜகவின் 40வது தொடக்க தினவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி பேசினார்.

பாஜகவின் 40வது தொடக்க தினவிழாவை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது: கரோனாவுக்கு எதிராக இந்தியா, சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் வழங்கும் ஆதரவும் பாராட்டும் வகையில் உள்ளது.

மக்கள் ஊரடங்காக இருந்தாலும் சரி, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் உறுதியாக நிற்கிறோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் 130 கோடி மக்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த நாட்டு மக்கள் இத்தகைய ஒழுக்கத்தைக் வெளிப்படுத்துவார்கள் என்று யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். நேற்று இரவு நாட்டு மக்கள் காட்டிய ஒற்றுமை உணர்வை பார்த்தோம். கரோனா வைரசின் இருளை எதிர்த்துப் போராட கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை எண்ணற்ற விளக்குகள் ஏற்றப்பட்டன. 130 கோடி இந்தியர்கள் மேற்கொண்ட இந்த பெரிய நடவடிக்கைகள், எங்களை நீண்ட போருக்கு தயார்படுத்தியுள்ளன. கரோனாவுக்கு எதிராக இது நீண்ட போராக இருக்கும். அதற்காக நாம் சோர்ந்துபோய்விடக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory