» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மார்ச் 26 ஆம் தேதி நடைபெற மாநிலங்களவை தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

செவ்வாய் 24, மார்ச் 2020 4:56:56 PM (IST)

மார்ச் 26 ஆம் தேதி நடைபெற இருந்த மாநிலங்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாநிலங்களவையின் ஏப்ரல் மாதம் காலியாக உள்ள 55 இடங்களுக்கு மார்ச் மாதம் 26ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 10 மாநிலங்களில் 37 இடங்களுக்கு போட்டி இல்லை அதனால் வேட்பு மனு செய்தவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 18 இடங்களுக்கு மட்டும் மார்ச் மாதம் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் கோவிட்-19 வைரஸ் பரவிய காரணத்தினால் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு நடைபெற வேண்டிய ஒரே இடத்தில் கூட வேண்டியிருக்கிறது என்ற காரணத்தினால் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது . மார்ச் 31ஆம் தேதி வாக்கில் நிலைமை எப்படி உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து தேர்தலை எங்கு நடத்தலாம் என முடிவு செய்யும் என இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory