» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வருமான வரித் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு : மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு

செவ்வாய் 24, மார்ச் 2020 3:44:29 PM (IST)

வருமான வரித் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில்துறை நிறுவனங்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வருமானவரித் தாக்கல் தொடர்பான அனைத்திற்கும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி, 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமானவரித் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. 

தாமதமாக செலுத்தப்படும் வருமானவரி கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் 12% லிருந்து 9% ஆக குறைக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் தாமத கட்டணம், அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என்று அறிவித்துள்ளார். மேலும், கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு பணிகள் முடங்கியிருக்கும் நிலையில் ஆதார் - பான் எண் இணைப்புக்கு மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைய இருந்த கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மூன்று மாதங்களுக்கு பிற வங்கி ஏடிஎம்களில் கட்டணமில்லாமல் பணம் எடுக்க சலுகை அளிக்கப்படுகிறது. வங்கிகளுக்கு நேரில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வங்கிப் பணிகளுக்காக நேரில் செல்வதைத் தவிர்த்து டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாட்டில் பாதிக்கப்பட்டிருக்கும் தொழில்துறையினருக்கான நிவாரணத் தொகையை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மார்ச், ஏப்ரல், மே மாதத்துக்கான ஜிஎஸ்டியை தாக்கல் செய்ய ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. அதே சமயம், கால தாமதமாக கணக்குத்தாக்கல் செய்யும் பெரும் நிறுவனங்களுக்கான அபராதம் 12%ல் இருந்து 9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.தொழில் நிறுவனங்களின் இயக்குநர்கள் கூட்டத்தைக் கூட்ட 60 நாட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.  ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஈடுபடும் தொழில்துறையினரின் வசதிக்காக சுங்கத் துறை 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory