» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கட்டாய விடுமுறை தினங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

செவ்வாய் 24, மார்ச் 2020 3:31:38 PM (IST)

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டாய விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளதால், ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு கட்டாயம் ஊதியம் அளிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவரது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்திட சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக, அரசுப்பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளா்கள் மற்றும் அயல்பணியாளா்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. 

இதன் விளைவாக அவா்களின் ஊதியங்கள் குறைக்கப்படுகின்றன. இதனால் அவா்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு தற்போது அளிக்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறையை பணியில் இருந்த காலமாக அறிவிக்கவும், அதற்கேற்ப ஊதியம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory