» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அனைத்து நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராகத் தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு

திங்கள் 23, மார்ச் 2020 7:00:03 PM (IST)

 நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராகத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 415 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எட்டு  பேர் பலியாகியுள்ளனர்.  கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராகத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம்  வெளியிட்டுள்ள அறிவிக்கையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் அனைத்து தீர்ப்பாயங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராக தடை விதிக்கபடுகிறது. உச்ச நீதிமன்றத்தில் மனு அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை அனைத்தையும் ஆன்லைனில் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory