» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா வைரஸ் விளைவு: இந்தியாவில் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி - பல லட்சம் கோடி இழப்பு!!

திங்கள் 23, மார்ச் 2020 4:14:42 PM (IST)

கரோனா தாக்குதல் காரணமாக ஒவ்வொரு துறையிலும் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தொழில் அதிபர்கள், வர்த்தகர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட மத்திய-மாநில அரசுகள் சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா வைரஸ் நோய் தாக்குதல் பீதியால் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளின் வருகை, மக்கள் வெளியூர்களுக்கு செல்வது நிறுத்தம், மக்கள் அதிகம் கூடும் மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், பெரிய கடைகள் திறப்பதற்கு தடை, வாகன நடமாட்டங்களுக்கு கட்டுப்பாடு, மூலப்பொருட்கள் வருவதில் தடை போன்ற காரணங்களால் அனைத்து பிரிவு வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒவ்வொரு துறையிலும் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட மத்திய-மாநில அரசுகள் சலுகைகளையும், பல்வேறு உதவிகளையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் எந்தெந்த துறைகளில் எவ்வளவு வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன, அவர்கள் அரசிடம் கேட்கும் உதவிகள், சலுகைகள் என்ன என்பது பற்றிய விவரங்கள் வருமாறு: இந்த துறையில் சுமார் 4.2 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. கரோனா பிரச்சினையால் இந்த பொருட்களின் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது.

இதன் விற்பனை சங்கிலி தொடரும் அறுந்து உள்ளது. ஏற்கனவே கிராமப்புறங்களில் இதன் விற்பனை கடும் சரிவில் இருந்த நிலையில் கரோனா பாதிப்பு மோசமான நிலையை எட்டி உள்ளது. இதனால் வர்த்தகர்களுக்கான வரியை ரத்து செய்ய வேண்டும். வரி செலுத்தும் அவகாச காலத்தை 90 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த துறையில் ரூ.60 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும். கரோனா பிரச்சினையால் 2 லட்சம் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

சில்லரை வர்த்தக விற்பனை 70 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த துறையினரும் சில சலுகைகளை அரசிடம் கேட்டுள்ளனர். அதாவது வரி செலுத்துவதற்கு 90 நாள் அவகாசம் வேண்டும். கடன்களை திருப்பி செலுத்த 4 மாதம் அவகாசம் தர வேண்டும். ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையில் ஊழியர்களுக்கான சம்பளத்தில் 50 சதவீதத்தை அரசு தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் ரூ.18 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும். கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் இதுவும் ஒன்றாகும். பெரும்பாலான தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், உணவுக்கூடங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக வருமானம் முற்றிலும் நின்றுவிட்டது. அதாவது இந்த துறையில் உள்ள 5 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இது, 70 சதவீத வேலை இழப்பாகும்.

எனவே, இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஜி.எஸ்.டி. வரியில் ஒரு வருடத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். கடன் திருப்பி செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். ஊழியர்களுக்கான சம்பளம் வழங்க ஒரு வருடத்துக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்று கேட்கின்றனர்.

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில்  1.82 லட்சம் கோடி வர்த்தகம் நடக்கும் துறையாகும். சினிமா, டி.வி. ஷூட்டிங் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு உள்ளது. பெரும்பாலான வர்த்தக விளம்பரங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த துறையில் சுமார் 80 சதவீத நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 3 வருடத்துக்கு கடன்களுக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும். கடன்களை திருப்பி செலுத்த கூடுதலாக ஒரு வருடம் அவகாசம் வேண்டும்.

பத்திரிகை காகிதத்துக்கான வரியை ரத்து செய்ய வேண்டும். வரிகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர். இந்த துறையில் 2.25 லட்சம் கோடியில் வர்த்தகம் நடைபெறும். பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. இயக்கப்படுகின்ற விமானத்திலும் பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது. இதனால் வருவாய் இழப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே, இவர்களும் சில கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

விமான நிலையங்களில் தரை இறங்குதல், விமானங்களை நிறுத்துவதற்கான கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். எரிபொருளுக்கான வரியை ரத்து செய்ய வேண்டும். தள்ளுபடி விலையில் எரிபொருள் மற்றும் வசதிகளை தரவேண்டும் என்று கேட்டுள்ளனர்.ரூ.13.5 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் துறை ஆகும். கரோனா பிரச்சினையால் 18 ஆயிரம் பெரிய கட்டுமான திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 30 சதவீதம் பேர் வேலை இழந்து இருக்கிறார்கள். கட்டுமான துறையில் பண நடமாட்டம் முற்றிலும் நின்று விட்டது.

எனவே, கடன்களை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை 3 மாதம் நீடிக்க வேண்டும். வட்டிகளை குறைக்க வேண்டும். கட்டுமானத்தை முடித்து ஒப்படைக்கும் காலத்துக்கான அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். சுமார் ரூ.30 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் துறை ஆகும். கரோனாவால் பெரும்பாலான உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் தேவையும் குறைந்து விட்டது. மூலதன இருப்பு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எனவே, கடன் செலுத்தும் காலத்தை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும். வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரி செலுத்தும் காலத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். வங்கி மற்றும் வங்கி அல்லா நிதி நிறுவனங்கள் துறையில் ரூ.233 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. கரோனாவால் இவற்றில் கடன் வாங்கியவர்கள் முதல் மற்றும் வட்டியையும் திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

குறிப்பாக விமான நிறுவனம், ஓட்டல்கள், போக்குவரத்து துறைகள் கடுமையான பாதிப்பில் இருக்கின்றன. இதனால் அவர்களால் கடனை சரியாக திருப்பி செலுத்த முடியாது. இது போன்ற காரணங்களால் வங்கிகளின் கடன் வளர்ச்சி 10 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கடன் வசூலுக்கான காலத்தை நீடிக்க வேண்டும். ஒப்பந்த விதிமுறைகளில் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டும். சில சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர்.

இந்த துறையில் 2.55 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. தற்போது 20-ல் இருந்து 30 சதவீதம் வரை வர்த்தக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உணவு பொருட்கள் மற்ற வகை சேவை பொருட்கள் சப்ளை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் தங்கள் தொழில்களை தடை ஏற்படாமல் நடத்துவதற்கு உதவ வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

அழைப்பின் பேரில் வாடகை கார்களை அனுப்பும் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. சுமார் 60 சதவீதம் வரை தொழில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக இந்த நிறுவனங்கள் கூறுகின்றன. மேலும் இதன் டிரைவர்கள் வருமானம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கார்களுக்கான கடனில் 2 மாதாந்திர தவணையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்பதுறை (ஐ.டி.) துறையில்  ரூ.14.32 லட்சம் வர்த்தகம் நடைபெறும் துறையாக இது உள்ளது. கரோனா பிரச்சினையால் பல்வேறு ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்கள் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அதுவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த துறையில் ரூ.45 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. தற்போது எரிபொருள் தேவை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் வருமான இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மின் உற்பத்தி துறைகளும் பல்வேறு வகையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ரூ.4.5 லட்சம் கோடி புழங்கும் துறை ஆகும். கல்விக்கூடங்கள் மூடல், வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதில் பிரச்சினை போன்றவற்றால் இவை பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அரசு விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory