» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா அச்சுறுத்தல் : 4 மணி நேரம் மட்டுமே வங்கிகள் செயல்படும்- சில சேவைகளும் ரத்து!

திங்கள் 23, மார்ச் 2020 11:29:17 AM (IST)

கரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, வங்கிகளின் பணி நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என மாற்றப்பட்டுளள்து. அதாவது, தினமும் வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பாஸ்புக் பதிவு மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை மாற்றுதல் போன்ற சேவைகளை வங்கிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றன. மேலும், காசோலைகள் வங்கியின் கவுண்டர்களில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும், வங்கிக்கு வெளியே அல்லது ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் செக் டெபாசிட் பெட்டகங்கள் வழியாக மட்டுமே ஏற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory