» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா கொரோனா தாக்குதலை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது : பிரதமர் மோடி உரை

வியாழன் 19, மார்ச் 2020 8:44:35 PM (IST)

130 கோடிக்கும் மேல் மக்களை கொண்ட இந்தியா கொரோனா தாக்குதல் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என பிரதமர் மோடி பேசினார்.

கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்தும், நாட்டு மக்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அவர் பேசும் போது, உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது, உலகப் போரை விட அதிக நாடுகளை கொரோனா பாதித்துள்ளது .தற்போது கொரோனாவை விட முக்கிய பிரச்சினை ஏதும் இல்லை, 

கொரோனா தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது, ஒவ்வொரு இந்தியனும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது.திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது. கொரோனா வைரஸ் பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. சில நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பரவலை தடுத்துள்ளது, மக்களை தனிமைப்படுத்தி, பரவலை தடுத்துள்ளது.

130 கோடிக்கும் மேல் மக்களை கொண்ட இந்தியா இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்,வீட்டில் இருந்தே பணி செய்யும் முறைக்கு மாற வேண்டும், இரவு நேரங்களில் வெளிவருவதை தவிர்ப்பது நல்லது, தற்போது நாட்டு மக்களிடம் நான் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்,

கொரோனா வைரஸ் பாதுகாப்பு தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சர் இதுவரை 8 உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பற்றிய தகவல்களை கவலையுடன் உலகம் பார்த்து வருகிறது நாம் ஆரோக்கியமாக இருந்தால், உலகம் ஆரோக்கியமாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory