» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாநிலங்களவை எம்.பியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்பு; எதிர்ப்பு தெரிவித்து காங். வெளிநடப்பு

வியாழன் 19, மார்ச் 2020 4:43:43 PM (IST)

மாநிலங்களவை எம்.பி.யாக முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்றுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து கடந்த 2019 நவம்பர் மாதம் 17-ம் தேதி ஓய்வு பெற்றவர் ரஞ்சன் கோகாய். கடந்த வாரம் இவர் மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் எதிர்க்கட்சியினரிடையே பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ரஞ்சன் கோகாய் நியமன எம்.பி.யாக நியமிக்கப்படுவது மோசமான முன்னுதாரணமாக அமையும் எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

மாநிலங்களவை எம்.பியாக முன்னாள் தலைமை நீதிபதி இன்று பதவியேற்றுக்கொண்டார். முன்னதாக, ராஜ்யசபா அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார் ரஞ்சன் கோகய். வெங்கய்யா நாயுடு ரஞ்சன் கோகய்க்கு வாழ்த்து தெரிவித்தார். ரஞ்சன் கோகாய் பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory