» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா அச்சம்: 50 சதவீதம் மத்திய அரசு ஊழியர்கள் வீடுகளில் இருந்து செய்ய உத்தரவு

வியாழன் 19, மார்ச் 2020 3:57:41 PM (IST)

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீடுகளில் இருந்து பணியாற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிர்க்கொல்லி வைரசான கரோனா உலகம் முழுவதும் பரவி மனித சமுதாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் 176 நாடுகளுக்கு பரவி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் 168 பேருந்து வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் பலியாகி உள்ளனர். 

கரோனா வைரஸ் பரவி வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. குறிப்பாக, மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும்படி  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில், கணினி சார்ந்த பணியாளர்களுக்கு வீட்டிலிருந்தபடியே பணியாற்றும் வாய்ப்பை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. 

அவ்வகையில் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என்றும், எஞ்சிய 50 சதவீதம் பேர் வீடுகளில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அலுவலகங்களுக்கு மத்திய பணியாளர் நலன் அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory