» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா அச்சுறுத்தல் : சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு: மார்ச் 31-ல் புதிய தேதிகள் அறிவிப்பு

வியாழன் 19, மார்ச் 2020 10:11:47 AM (IST)

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாள் மார்ச் 31-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. அண்டார்டிகா மாகாணம் தவிர்த்து அனைத்து கண்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாதுகாப்பு கருதி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்பட்டு வந்த பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் த்ரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 19 முதல் 31-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதே தேதிகளில் நடைபெறுவதாக இருந்த வடகிழக்கு டெல்லித் தேர்வர்களுக்கான தேர்வும் தள்ளி வைக்கப்பட்டுகிறது. ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து மறு ஆய்வு செய்யப்படும். அதைத் தொடர்ந்து மார்ச் 31-ம் தேதி, புதிய தேதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory