» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஈரானில் உள்ள 255 இந்தியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு: மத்திய வெளியுறவுத்துறை தகவல்

வியாழன் 19, மார்ச் 2020 8:45:15 AM (IST)

ஈரானில் உள்ள 255 இந்தியர்கள் உட்பட வெளிநாடுகளில் உள்ள மொத்தம் 276 இந்தியர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் நேற்று மக்களவையில் தெரிவித்தார்.

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் ‘‘கரோனாவால் வெளிநாடுகளில் மொத்தம் 276 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 255 பேர் ஈரானிலும் 12 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டிலும் 5 பேர் இத்தாலியிலும் ஹாங்காங், குவைத், ருவாண்டா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் தலா ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என முரளிதரன் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் ஈரானில் இருந்து இதுவரை 389 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸில் தவிக்கும் மாணவர்கள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயிலும் தமிழக மாணவர்கள் உட்பட இந்திய மாணவர்கள் 50 பேர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். கரோனா வைரஸ் பீதியால் பிலிப்பைன்ஸ் அரசு பல்கலைகழகங்களை மூடியுள்ளது. மேலும் வெளிநாட்டினர் அனைவரும் 72 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மார்ச் 16ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அரசு வெளிநாடுகளுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளதால் பிலிப்பைன்ஸில் உள்ள இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். பிலிப்பைன்ஸில் உணவகங்கள், தங்கும் விடுதிகள் மூடப்படுவதால் தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் தங்களை விரைவில் அழைத்து செல்ல விமானங்களை அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு இந்திய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களவையில் நேற்று பல எதிர்க்கட்சி எம்.பிக்கள் பிலிப்பைன்ஸில் இந்திய மாணவர்கள் சிக்கி தவிக்கும் விவகாரத்தை எழுப்பினர். 

மாணவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர மணிலா மற்றும் கோலாலம்பூருக்கு மத்திய அரசு சிறப்பு விமானங்கள் அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள இந்திய தூதரகம் தன் டுவிட்டர் பக்கத்தில்  ‘’மாணவர்கள் நாடு திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய வெளியுறவுத்துறையுடன் இணைந்து எடுத்து வருகிறோம். அனைவரும் பொறுமை காக்கும்படி வேண்டுகிறோம்’’ என தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உறுதி அளித்த்துள்ளார்.

நாடு திரும்பினர்

மலேசியாவில் சிக்கி தவித்த 150 இந்திய மாணவர்கள் நேற்று மாலை நாடு திரும்பினர். கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினத்திற்கு வந்தடைந்தனர். மலேசியாவுடனான விமான சேவையை இந்திய அரசு ரத்து செய்ததால் பிலிப்பைன்ஸில் இருந்து மலேசியா வரை வந்த மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்தனர். இந்நிலையில் அவர்கள் அனைவரும் நேற்று பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory