» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா விஷயத்தில் இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்கப்போகிறது : ராகுல் காந்தி எச்சரிக்கை!

புதன் 18, மார்ச் 2020 5:27:45 PM (IST)

அரசின் இயலாமையால் கரோனா விஷயத்தில் இந்தியா மிகப் பெரிய விலையைக் கொடுக்கப்போகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களை உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸால் பாதித்தோரின் எண்ணிக்கை 150-ஐ தொட்டுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. 

இந்த வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 31-ஆம் தேதி வரை அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு, வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து அவர் சுட்டுரைப் பதிவில், "கரோனா வைரஸை எதிர்கொள்ள துரிதமான அதிரடி நடவடிக்கை தேவை. உறுதியாக செயல்பட முடியாத அரசின் இயலாமையால் இந்தியா மிகப் பெரிய விலையைக் கொடுக்கப்போகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து

உண்மMar 20, 2020 - 04:54:07 PM | Posted IP 162.1*****

பப்புவும்,மோடியும் முட்டாள்கள்

உண்மைMar 19, 2020 - 04:37:30 PM | Posted IP 108.1*****

முட்டாள் பப்பு!

மக்கள்Mar 18, 2020 - 10:05:20 PM | Posted IP 108.1*****

லூசு பயல். குறை சொல்வதே இவனின் வேலை. ப்ரயோஜமான பங்களிப்பு எகுவும் கிடையாது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory