» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதாமலே தேர்ச்சி - முதல்வர் அறிவிப்பு

புதன் 18, மார்ச் 2020 4:59:41 PM (IST)

கரோனா எதிரொலியாக உத்தரப் பிரதேசத்தில் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 

சீனாவில் உருவான கரோனா வைரஸ் இன்று உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. தொடர்ந்து, கரோனா தொற்றைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதத் தேவையில்லை எனவும் அவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்பட்டு அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். முன்னதாக, தொடக்கப்பள்ளிகளில் மார்ச் 23 முதல் 28 வரை தேர்வு நடத்த மாநில அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

உண்மைMar 19, 2020 - 04:38:54 PM | Posted IP 162.1*****

தமிழகத்திலும் விரைவில் இது போன்று அறிவிப்பு வெளிவரும்!

தமிழன்Mar 18, 2020 - 06:50:59 PM | Posted IP 173.2*****

நல்ல சிந்தனை !

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory