» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி பாஜக மனு: கமல்நாத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

செவ்வாய் 17, மார்ச் 2020 4:39:03 PM (IST)

மத்தியப் பிரதேசத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி பாஜக தொடர்ந்த வழக்கில் கமல்நாத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா விலகியதையடுத்து, அவரது ஆதரவாளர்களாக அறியப்படும் 22 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்தனர். இதையடுத்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கோரி மாநில ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் பாஜக கடந்த சனிக்கிழமை மனு அளித்தது. இதைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடரின்போது திங்கள்கிழமை பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். 

ஆனால், திங்கள்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியபோது ஆளுநர் உரைக்குப் பிறகு கரோனா அச்சுறுத்தல் காரணமாக பேரவையை மார்ச் 26-ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் என்பி பிரஜாபதி அறிவித்தார். இதையடுத்து, ஆளுநர் வழிகாட்டுதலை மீறும் செயலாக மத்தியப் பிரதேச பேரவையில் திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவில்லை என்றும் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் பாஜக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்  இன்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் அவசரத் தன்மையைக் கருத்தில் கொண்டு புதன்கிழமை காலை 10.30 மணிக்குள் கமல்நாத் அரசு பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory