» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஷீரடியில் முழு அடைப்பு போராட்டம் : உணவு விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடல்

ஞாயிறு 19, ஜனவரி 2020 10:06:40 PM (IST)

மகாராஷடிரா மாநிலத்தில் உள்ள ஷீரடியில் பல்வேறு பகுதிகளில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. கடைகள், உணவு விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.

ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு சமீபத்தில் வருகை தந்த மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறும்பொழுது, சாய்பாபா பிறந்தது பர்பானி நகரில் உள்ள பத்ரி என்ற இடம் ஆகும். ஷீரடி அல்ல. அதனால் பத்ரி நகர வளர்ச்சிக்காக 100 கோடி ரூபாய் வழங்கப்படும் என உத்தவ் தாக்கரே கூறினார். முதலமைச்சரின் இந்தக் கருத்து ஷீரடி பகுதி மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் ஷீரடியில் இன்று பந்த் நடத்தப்படும் என அறிவித்தனர்.

இதனை அடுத்து, ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி இன்று முதல் (19-1-2020) மூடப்படுகிறது என்ற தகவல் வெளியானது. ஆனால் இந்த செய்தியில் உண்மையில்லை என சாய்பாபா கோயில் நிர்வாகம் பின்னர் விளக்கமளித்தது. ஷீரடி சாய்பாபா கோயில் இன்று திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது. சாய்பாபா கோயிலில் ஆரத்தி வழிபாடு உள்ளிட்ட அனைத்து மத சடங்குகளும் தொடர்ந்து நடைபெற்றன. மருத்துவமனைகள் உள்ளிட்ட சேவைகள் வழக்கம்போல் செயல்பட்டன. 

அன்னதானம் நடைபெறும் மையம் மற்றும் லட்டு விற்பனை செய்யும் மையங்கள் முன் பக்தர்கள் திரளாக வரிசையில் சென்றனர். ஷீரடி பகுதியில் இன்று பந்த் கடைப்பிடிக்கப்பட்டது. சாய்பாபா கோயிலின் முன்னாள் அறங்காவலர் மற்றும் பா.ஜ.க. உறுப்பினரான சச்சின் பாட்டீல் இந்த பந்த் பற்றி கூறும்பொழுது, ஷீரடி நகரில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவு விடுதிகள் மற்றும் உள்ளூர் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டு, முழு அடைப்பு கடைப்பிடிக்கப்பட்டு உள்ளது. ஷீரடியை சுற்றியுள்ள 25 கிராமங்களிலும் இந்த பந்த் அனுசரிக்கப்பட்டு உள்ளது. பந்த் வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

உண்மைJan 20, 2020 - 07:20:26 AM | Posted IP 173.2*****

மதத்தை வைத்து காசுக்காக பிசினஸ் பண்ணும் ஒரு கூட்டம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory