» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிஏஏ, என்பிஆர்-ஐ எதிர்ப்பவர்கள் ஓரணியில் இணைய வேண்டும்: ப. சிதம்பரம்

சனி 18, ஜனவரி 2020 7:50:37 PM (IST)

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை  எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்நாட்டு நலனுக்காக சிஏஏ மற்றும் என்பிஆர்-ஐ எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும், அது உள்ளடக்கியுள்ள மதிப்புகளைப் பாதுகாக்கவுமே நாம் போராடுகிறோம் என்பதுதான் விரிவான பார்வையாகும். எனவே, இதற்காகப் போராடும் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும். அது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

முடிந்தளவுக்கு நிறைய கட்சிகளை இணைக்க சோனியா காந்தி முயற்சி செய்தார். அதில் 20 கட்சிகள் பங்கேற்றன. சிலர் பங்கேற்கவில்லை. அதற்காக இது இறுதி முடிவாகிவிடாது. மறுபடியும் ஒரு கூட்டம் நடைபெறலாம். அதில் அவர்கள் பங்கேற்கலாம். நாங்கள் ஒன்றாக போராடுகிறோமா என்பது முக்கியமல்ல. நாங்கள் அனைவரும் போராடுகிறோம் என்பதுதான் முக்கியம். தனித்தனியாக போராடினாலும் அது போராட்டம்தான், ஒன்றிணைந்து போராடினாலும் அது போராட்டம்தான். 

ஆனால், சிஏஏ மற்றும் என்பிஆர்-க்காக ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியைக் கட்டமைக்க நாங்கள் முயற்சிக்கிறோம் என்பதுதான் நிதர்சனம். இதில் நாங்கள் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளோம். சில கட்சிகள் தனியாக போராடுகின்றன. ஒருநாள் அவர்களும் ஒருங்கிணைந்த தளத்தில் வந்து இணைவார்கள் என நம்புகிறேன் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory