» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்

வெள்ளி 13, டிசம்பர் 2019 4:55:21 PM (IST)

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ள மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன் இடம் பெற்றுள்ளார்.

அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ் 2019  உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் முதலிடம் பிடித்து உள்ளார். தொடர்ந்து 9-வது ஆண்டாக மேர்க்கெல் முதல் இடத்தில் உள்ளார். சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில்  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிதாக சேர்ந்து உள்ளார். மேலும் எச்.சி.எல். நிறுவன  தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா மற்றும் பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார்-ஷா ஆகியோரும்  இடம் பெற்றுள்ளனர்.

மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் புதியவரான நிர்மலா சீதாராமன் 34-வது இடத்தில் உள்ளார். வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா 29 வது இடத்தில் உள்ளார். நிதி அமைச்சக பொறுப்பை  தனி ஒருவராக  வைத்திருக்கும் முதல் பெண் நிர்மலா சீதாராமன். இதற்கு முன், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நிதி அமைச்சக பொறுப்பை கூடுதல் பொறுப்பாக எடுத்துக் கொண்டிருந்தார். இந்த பட்டியலில் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா 54-வது இடத்தில் உள்ளார். எச்.சி.எல். கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரியாக, 8.9 பில்லியன் அமெரிக்க டாலர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கான அனைத்து  முடிவுகளையும் அவரே எடுக்கிறார். இந்த பட்டியலில் 65 வது இடத்தில் உள்ள மஜும்தார்-ஷா உள்ளார். 

பட்டியலில் ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் முதலிடத்திலும், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் இரண்டாவது இடத்திலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி மூன்றாம் இடத்திலும் உள்ளனர். பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவர் மெலிண்டா கேட்ஸ் 6-வது இடத்திலும்,  ஐபிஎம் தலைமை நிர்வாக அதிகாரி ஜின்னி ரோமெட்டி 9-வது இடத்திலும்  பேஸ்புக் சிஓஓ ஷெரில் சாண்ட்பெர்க் 18 வது இடத்திலும், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் 38 வது இடத்திலும் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகர் இவான்கா டிரம்ப் 42 வது இடத்தில் உள்ளார். பாடகர்கள் ரிஹானா 61 வது இடத்திலும்,  பியோனஸ் 66 வது இடத்திலும் மற்றும் டெய்லர் ஸ்விஃப்ட்71 வது இடத்திலும், டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் 81 வது இடத்திலும்  டீனேஜ் காலநிலை ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் 100வது இடத்திலும் உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory