» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரேப் இன் இந்தியா கருத்துக்கு மன்னிப்பு கோர மாட்டேன்: ராகுல் திட்டவட்டம்

வெள்ளி 13, டிசம்பர் 2019 3:50:07 PM (IST)

அஸ்ஸாம் பிரச்னையை திசை திருப்ப பாஜக நடத்தும் நாடகம். எனவே ரேப் இன் இந்தியா கருத்துக்கு மன்னிப்பு கோர மாட்டேன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட்  மாநிலத்தின் கொட்டா எனுமிடத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் கலந்து கொண்டார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, "மேக் இன் இந்தியா" (இந்தியாவில் தயாரியுங்கள்) என்று கூறி வந்தார். ஆனால் தற்போது "ரேப் இன் இந்தியா" (இந்தியாவில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுங்கள்) எனும் நிலைமை ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பாஜக எம்எல்ஏ, இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தார். 

பின்னர் அந்த பெண்ணுக்கு விபத்தும் ஏற்பட்டது. ஆனால், பிரதமர் மோடி இதுகுறித்து எதுவும் கூறாமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார் என நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மையப்படுத்தி விமர்சித்தார். இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உட்பட பாஜக பெண் எம்பிக்கள் மற்றும் அனைவரும் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாட்டிலுள்ள பெண்களை ராகுல் அவமதித்துள்ளதாக குற்றம்சாட்டினர். இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தனது கருத்துக்கு மன்னிப்பு கோரப்போவதில்லை என ராகுல் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ரேப் இன் இந்தியா என நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோரப்போவதில்லை. தில்லியை பாலியல் வன்கொடுமைகளின் தலைநகரம் என பிரதமர் மோடி விமர்சித்த காட்சி என்னிடம் உள்ளது. அதை அனைவரும் பார்க்கும் விதமாக எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட உள்ளேன். அஸ்ஸாமில் நடைபெற்று வரும் போராட்டங்களை திசை திருப்பும் விதமாகவே பாஜக வேண்டுமென்றே திட்டமிட்டு இப்பிரச்னையை ஏற்படுத்தி நாடகமாடி வருகிறது என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ssaamiDec 13, 2019 - 04:35:27 PM | Posted IP 49.20*****

நாட்டில் இவர் போன்ற நாத்திகளை உலவ விடுவதே தப்பு

ராமநாதபூபதிDec 13, 2019 - 04:27:55 PM | Posted IP 173.2*****

இதில் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமே இல்லை. மோடி தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory