» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாஸ்போர்ட்களில் தாமரை ஏன்? காங்கிரஸ் கேள்விக்கு மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் விளக்கம்!

வெள்ளி 13, டிசம்பர் 2019 3:47:00 PM (IST)

புதிய பாஸ்போர்ட்களில் தாமரை அச்சிடப்படுவது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்தது. 

மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது, கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் விநியோகிக்கக் கொண்டுவரப்பட்ட புதிய பாஸ்போர்ட்களில் தாமரை அச்சிடப்பட்ட இந்த பிரச்சினையை எழுப்பிய காங்கிரஸின் எம்.கே.ராகவன், இந்த விவகாரம் செய்தித்தாள்களில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளது என்றும் இது மத்திய அரசாங்கத்தின் மேலும் "காவி" பிரச்சாரத் திட்டத்தின் மற்றொரு முகம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். ஏனெனில், தாமரை பாஜகவின் தேர்தல் சின்னமாகவும் இருப்பதால் அவர் அவ்விதமாகக் குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரான ரவீஷ் குமார்,  "இந்த முயற்சியானது, நமது தேசிய மலரை பாஸ்போர்ட்டில் பதிப்பிப்பதன் மூலமாகப் போலி பாஸ்போர்ட்களை அடையாளம் காண மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியே தவிர, இதில் வேறு எந்த மறைமுக உள்நோக்கமும் இல்லை" என்றார். இந்த பாதுகாப்பு அம்சங்கள் சர்வதேச சிவில் விமான அமைப்பின் (ஐ.சி.ஏ.ஓ) வழிகாட்டுதலின் ஒரு பகுதியாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, என்றும் அவர் தெரிவித்தார்.

"தாமரை தவிர, பிற தேசிய சின்னங்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும். இப்போது அது தாமரை, பின்னர் அடுத்த மாதம் வேறு ஏதாவதொரு தேசியச் சின்னமாக மாறி இருக்கும். இவை தேசிய மலர் அல்லது தேசிய விலங்கு போன்ற இந்தியாவுடன் இணைக்கப்பட்ட அடையாளங்களாகவே இருக்கும்"   என்றும் அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory