» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

என்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்: ‍ பிரபல தொழில் அதிபர் பெருமை

வியாழன் 12, டிசம்பர் 2019 5:29:18 PM (IST)என்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என பிரபல தொழில் அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் கூறி உள்ளார்.

பிரபல தொழில் அதிபரும் விர்ஜின் குழுமத்தின் தலைவருமான ரிச்சர்ட்  பிரான்சன் மராட்டிய மாநிலம்  வந்துள்ளார். மராட்டிய  முதல்வர் உத்தவ் தாக்கரேயை இன்று அவர் சந்திக்கிறார். ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட தொழிலதிபர்களையும் சந்திக்கவுள்ளார். மும்பையில் நிருபர்களுக்கு  பிரான்சன் கூறியதாவது: தனக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னுடையை டி.என்.ஏ.வைப் பரிசோதித்தபோது இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது.  என்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டில் உள்ள கடலூரில் 1793- ம் ஆண்டு முதல் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வந்துள்ளனர். 

அப்போது, என்னுடைய மூதாதையர் ஆர்யா என்ற தமிழகப் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தியர்களை நான் சந்திக்கும்போதெல்லாம் ஒருவேளை நாம் இருவரும் உறவினர்களாக கூட இருப்போம் என்று விளையாட்டாக கூறுவது உண்டு என்றும் பிரான்சன் கூறினார். விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் புதிய சின்னமாக தமது எள்ளு பாட்டியை குறிக்கும் உருவம் இடம்பெறும் என்றும் ரிச்சர்டு பிரான்சன் கூறியுள்ளார். பிரான்ஸனின் மூதாதையர்களில் ஒருவரான ஜான் எட்வர்ட் 1793- ம் ஆண்டு முதன்முறையாக சென்னை வந்துள்ளார். இங்கிருந்து அவரின் குடும்பம் கடலூருக்கு நகர்ந்துள்ளது. இவரின் தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.


மக்கள் கருத்து

தமிழன்Dec 13, 2019 - 06:04:10 PM | Posted IP 162.1*****

கிறிஸ்தவர்கள் பெயர் அப்படி தான் இருக்கும் .

உண்மைDec 13, 2019 - 01:12:22 PM | Posted IP 162.1*****

தமிழ் தமிழன் என கூறுவோர் பெயர் தமிழில் இல்லை!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory