» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நித்யானந்தா இருப்பிடம் குறித்து 12-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 10, டிசம்பர் 2019 10:21:00 AM (IST)

நித்யானந்தா இருப்பிடம் குறித்து 12-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இன்டா்போல் அமைப்பை நாட குஜராத் காவல்துறை முடிவு செய்துள்ளது. 

நித்யானந்தா மீதான கற்பழிப்பு வழக்கை பெங்களூருக்கு ராம்நகரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் இருந்து மாற்றக் கோரி அவரது முன்னாள் சீடரான லெனின் கருப்பன் பெங்களூரு உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு நித்யானந்தா குறித்த பல சர்ச்சைக்குரிய சம்பவங்களை அம்பலப்படுத்தியவர் லெனின் கருப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி நரேந்திர, கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நீதிமன்ற விசாரணைகளை தவிர்த்து வரும் நித்யானந்தா இருப்பிடம் தொடர்பாக உரிய தகவல்களை அளிக்குமாறு மாநில அரசு மற்றும் கர்நாடக போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் அன்றைய தினத்துக்குள்ளாக நித்யானந்தா இருப்பிடம் தொடர்பாக தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குஜராத் ஆசிரமத்திலிருந்து 2 சிறுமிகள் கடந்த மாதம் மாயமானது தொடா்பாக, குழந்தைகளைக் கடத்தியதாகவும், ஆசிரமத்துக்கு நன்கொடை திரட்ட அவா்களை பயன்படுத்தியதாகவும் நித்யானந்தா மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஈக்வடாா் அருகே ஒரு தீவில் கைலாசா என்ற ஹிந்து நாட்டை அவா் உருவாக்கியிருப்பதாகவும், அந்த நாட்டுக்கான கொடி, அரசியல் நடைமுறையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடா்ந்து, நித்யானந்தாவின் இருப்பிடத்தை கண்டறியும் வகையில் அவருக்கு எதிராக புளூ காா்னா் நோட்டீஸ் பிறப்பிக்கக் கோரி, இன்டா்போல் அமைப்பை நாட குஜராத் காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த நோட்டீஸின்படி, சம்பந்தப்பட்ட நபா் தங்களது நாட்டில் இருந்தால் அவரது இருப்பிடத்தை உறுப்பு நாடுகள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இன்டா்போல் அமைப்பை நாடுவதற்காக, மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) ஆமதாபாத் ஊரக காவல்துறை தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory