» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு: திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு

திங்கள் 9, டிசம்பர் 2019 5:15:18 PM (IST)

தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவளிப்பதாக நவநீத கிருஷ்ணன் எம்.பி தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்தார். தொடர்ந்து, மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் 293 எம்பிக்கள் ஆதரவும், 82 எம்பிக்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். அண்டை நாடான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் அகதிகளாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory