» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒரு வாரத்திற்குள் ஆவணங்களை ஒப்படையுங்கள்: பொன்.மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உததரவு!!

திங்கள் 9, டிசம்பர் 2019 5:09:57 PM (IST)

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சம்பந்தப்பட்ட ஆவணங்களை தமிழக அரசிடம் ஒரு வாரத்திற்குள் பொன்.மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்காத முன்னாள் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேலுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ஒரு அதிகாரியின் பணி நீட்டிப்புக் காலம் முடிந்தவுடன் அவர் வழக்கு தொடர்பான ஆவணங்களை உயர் அதிகாரிகளிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்பது சட்டம்.

ஆனால், சிலை கடத்தல் வழக்கை விசாரித்த முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தனது பணி நீட்டிப்புக் காலம் முடிந்தும் வழக்குத் தொடர்பாக எந்தவொரு ஆவணத்தையும் இதுவரை ஒப்படைக்கவில்லை. மேலும் பணி நீட்டிப்புக் காலம் முடிந்த பின் ஒரு நாள் கூட வழக்கு தொடர்பான ஆவணங்களைக் கையில் வைத்திருக்கக் கூடாது. எனவே ஆவணத்தை உடனடியாக ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், ஒரு வாரத்தில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டனர். மேலும், ஆவணங்களை ஒப்படைத்ததற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கு மீதான விசாரணையை வரும் டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory