» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா வந்துள்ள ஸ்வீடன் அரசர் – ராணிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : பிரதமர் மோடியுடன் சந்திப்பு

திங்கள் 2, டிசம்பர் 2019 5:27:23 PM (IST)இந்தியா வந்துள்ள ஸ்வீடன் அரசர் கார்ல் கஸ்தஃப் மற்றும் ராணி சில்வியா ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினர்.

ஸ்வீடன் அரசர் 16வது கார்ல் கஸ்தஃப் மற்றும் ராணி சில்வியா ஆகிய இருவரும், 5 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று காலை இந்தியா வந்தடைந்தனர். இன்று காலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த ஸ்வீடன் அரசரும், ராணியும் இருதரப்பு உறவுகளை வலுபடுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் இருவரும், டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனிற்கு காரில் வந்தடைந்தனர். அவர்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும், அவரது மனைவி சவிதா கோவிந்தும் வரவேற்றனர். 

முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்ட ஸ்வீடன் அரசருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள ஐதரபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, ஸ்வீடன் அரசர் கார்ல் கஸ்தஃப் மற்றும் ராணி சில்வியா ஆகிய இருவரும் சந்தித்துப் பேசினார். இதில், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, இருதரப்பு நலன்களை சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர். மேலும், வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு நல்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


மக்கள் கருத்து

உண்மைDec 3, 2019 - 10:55:35 AM | Posted IP 108.1*****

மூஞ்சை பாருங்க எப்போ பார்த்தாலும் காமெரா மேல தான் ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory