» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வாய்ப்பில்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

திங்கள் 2, டிசம்பர் 2019 3:51:11 PM (IST)

பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைக்கும் திட்டம் ஏதுமில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்ததாவது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்படுவதையொட்டியே இந்தியாவில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரத்தை வைத்தே எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயம் செய்கின்றன.

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை குறித்து நிதியமைச்சகம் தனித்து முடிவெடுக்க முடியாது. ஜிஎஸ்டி கவுன்சில் கூடியே இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க முடியும். பெட்ரோலுக்கு மத்திய கலால் மற்றும் சுங்க வரியை தவிர மாநில அரசுகளும் வரி வசூலிக்கின்றன. இதுபற்றி மாநிலங்களும் ஒருமித்த கருத்தை தெரிவித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்"  என அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory