» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரூ.3லட்சம் கேட்டு 7 வயது சிறுவன் கடத்தல் : 10ம் வகுப்பு மாணவன் கைது

செவ்வாய் 19, நவம்பர் 2019 5:42:31 PM (IST)

தெலங்கானாவில் ரூ.3லட்சம் கேட்டு 7 வயது சிறுவனை கடத்தியதாக 10ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் மீர்பேட்டை டி.எஸ்.ஆர் நகரை சேர்ந்தவர் ராஜி. இவரது மகன் அர்ஜுன்(7). இவன் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அர்ஜுன் திடீரென மாயமானான். பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 6 மணிக்கு மர்ம நபர் ஒருவர் ராஜுவுக்கு போன் செய்து உனது மகனை கடத்தி விட்டேன். உடனடியாக ரூ.3 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் உனது மகன் வீட்டிற்கு வரமாட்டான் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜு ரூ.3 லட்சம் தருவதாக கூறி பணத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இதுகுறித்து மீர்பேட் காவல் நிலையத்தில் ராஜு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ராஜு போனுக்கு வந்த நம்பரை சோதனை செய்தனர். அப்போது வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான சிம் கார்டு என்பது தெரியவந்தது. ஆனால் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லாத நிலையில் சிம்கார்டு ஆதாரத்தை வைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ராஜுக்கு போன் செய்து அல்மாஸ்கூடாவிற்கு ரூ.3 லட்சத்துடன் வரவேண்டும் என மர்ம நபர் கூறியுள்ளார். ஆனால் ரூ.3 லட்சம் உடனடியாக திரட்ட முடியவில்லை. எனவே, ரூ.1 லட்சம் மட்டும் தருவதாகவும், மீதியை காசோலையாக தருவதாகவும் மர்ம நபரிடம் ராஜு தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட அந்த மர்ம நபர் உடனடியாக வரவேண்டும் என்றாராம்.

இதையடுத்து போலீசார் உதவியுடன் ராஜு, மர்ம நபர் கூறிய இடத்துக்கு 8 மணியளவில் சென்று பார்த்தபோது அங்கு அர்ஜுனை கடத்தியது 15 வயது நிரம்பிய 10ம் வகுப்பு மாணவன் என்பது தெரியவந்தது. அவனிடம் நடத்திய விசாரணையில் பணத்துக்காக சிறுவனை கடத்தியதும் இதில் வேறு யாருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மாணவனை சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory