» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது? கனிமொழி எம்பி கேள்வி

திங்கள் 18, நவம்பர் 2019 5:17:23 PM (IST)

பாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது? என நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.

பாத்திமா தற்கொலை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் கனிமொழி  பேசியதாவது:- சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான விசாரணைக்காக இதுவரை ஒருவர் கூட கைதாகவில்லை?  பாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது? எஃப்.ஐ.ஆர் அறிக்கையில் பாத்திமா கூறிய பேராசிரியர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. பாத்திமா தற்கொலை குறித்த தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர், பாத்திமாவின் அறைக்கு சென்ற போது அந்த அறை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டிருந்தது.

ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தன. அவர் தூக்குமாட்டிக்கொள்ள பயன்படுத்திய கயிறு கூட அங்கு இல்லை. கல்வி நிலையங்களில் சாதி மற்றும் மத ரீதியிலான பாகுபாட்டிற்கு இடமளிக்கக் கூடாது. உயர்கல்வி நிலையங்களில் பாகுபாடு தொடர்பாக இதுவரை 72 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதிக மாணவர்கள் உயிரிழக்கும் இடமாக ஐஐடி மாறி வருகிறது. மாணவர்கள் தற்கொலை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் எனத் தெரிவித்தார்

இதற்கு பதிலளித்த மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், உயர் கல்வித்துறை செயலாளரை விசாரணைக்காக அனுப்பி உள்ளதாக கூறினார்.  மேலும் சென்னை மாநகர கமிஷனர் ஏற்கனவே விசாரணையை தொடங்கி உள்ளதாக தெரிவித்த அவர், அவர்கள் தரும் அறிக்கைக்கு உட்பட்டு நிச்சயம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

இவன்Nov 20, 2019 - 04:59:11 PM | Posted IP 108.1*****

2G கேஸ், பஞ்சமி நில பத்திரம் , போன்ற பிரச்சனைகளை மறைந்து, மக்களை முட்டாளாக்கி நாடகம் போடும் திருட்டு திராவிட குரூப்ஸ்

தமிழ்ச்செல்வன்Nov 18, 2019 - 06:02:59 PM | Posted IP 162.1*****

நான் அடிக்கிற மாதிரி அடிப்பேன். நீ அழுற மாதிரி அழணும். ஓகே. ஆரிய-திராவிட திருட்டு கூட்டணி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory