» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: பலமணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

திங்கள் 18, நவம்பர் 2019 5:08:16 PM (IST)சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் வழிபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் கடந்த  16-ந்தேதி மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டின் முதல் நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழகம், கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் சபரிமலையில் அதிகளவு குவிந்த வண்ணம் உள்ளனர். பல மணிநேரம் காத்திருந்த பிறகுதான் பக்தர்களால் சாமிதரிசனம் செய்ய முடிந்தது. பம்பையில் இருந்தே பக்தர்களை கட்டுப்படுத்தி வரிசையில் அனுப்பும் நிலை ஏற்பட்டது. இதனால் போலீசார் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். 

அதேவேளையில் கடந்த ஆண்டு, உச்சநீதிமன்றம் உத்தரவை அமல்படுத்த மாநில அரசு முடிவெடுத்ததால், சபரிமலை கோவில் வளாக பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த முறை, சபரிமலை வரும் பெண்களுக்கு  பாதுகாப்பு வழங்குவது இல்லை என்ற முடிவை கேரள அரசு எடுத்துள்ளது. இதனால்,  பாதுகாப்பு கெடுபிடிகள் குறைந்துள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  நடப்பு ஆண்டு, அமைதியான சூழல் நிலவுவதாக சபரிமலைக்கு வந்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர். நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் வழிபட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory