» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வியாழன் 14, நவம்பர் 2019 4:25:04 PM (IST)

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. 

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58,000 கோடியில் 36 ரஃபேல் ரக போா் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் தலையீடு இருந்ததாகவும், முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.

இதனிடையே, இந்த ஒப்பந்தம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞா்கள் எம்.எல்.சா்மா, வினீத் தண்டா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோா் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ரஃபேல் போா் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று தீா்ப்பளித்து, அந்த மனுக்களை கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி தள்ளுபடி செய்து விட்டது.

இந்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, முன்னாள் மத்திய அமைச்சா்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சௌரி, மூத்த வழக்கறிஞா் பிரசாந்த் பூஷண், வழக்கறிஞா் வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனா். இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகிய 3 நீதிபதிகளைக் கொண்ட அமா்வு விசாரித்து வந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரஃபேல் ஒப்பந்தம் செல்லும் என்பதை உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உறுதி செய்துள்ளது. மேலும், ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்பதற்கு எதிராக தொடரப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 


மக்கள் கருத்து

The TruthNov 15, 2019 - 07:28:56 AM | Posted IP 162.1*****

Every Politicians Create Corruption

MakkalNov 14, 2019 - 06:07:39 PM | Posted IP 108.1*****

Believe modi government has no.corruption.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory