» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலை வழக்கு 7 நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றம்: பெண்களுக்கு அனுமதி தொடரும்!!

வியாழன் 14, நவம்பர் 2019 10:56:51 AM (IST)

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வழக்கில் தீர்ப்பளிக்காமல், உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து பரிந்துரைத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கிய தீா்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கும் என்று பல தரப்பட்ட மக்களால் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வழக்கை விசாரித்து அதில் ஒரு முடிவை எட்டாமல், 7 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி பரிந்துரை செய்துள்ளனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று இந்த பரிந்துரையை செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பா் 28-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இந்த தீா்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, பல்வேறு ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும், இந்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, நாயா் சா்வீஸ் சொசைட்டி, திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம், சபரிமலை கோயில் தந்திரி உள்பட பல்வேறு தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் 56 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கா், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்து வந்தது. மனுக்கள் மீதான இறுதி வாதங்கள் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், தீா்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த மறுஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்காமல், பெரிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து பரிந்துரை செய்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளிக்கும் வரை அனைத்து மறுஆய்வு மனுக்களும் நிலுவையில் இருக்கும். என்றும், சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற நிலையே தொடரும் என்றும் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory