» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

வியாழன் 14, நவம்பர் 2019 10:32:26 AM (IST)டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக  பள்ளிகளுக்கு   2 நாட்கள்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

காற்று மாசு பாதிப்பால் தலைநகர் வாழ் மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. எல்லா தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்திக் கொண்டிருக்கின்றன. தலைநகர் டெல்லியில் கட்டுமானப் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.

சுற்றுச்சூழல் மாசு என்பது, டெல்லி தொடர்பான பிரச்னை மட்டுமே என்று நாம் கருதினால் மிகமிகத் தவறு. விரைவிலேயே இந்தியாவிலுள்ள எல்லா நகரங்களும் டெல்லியைப் போல, காற்று மாசுக் கூண்டுகளாக மாறி இயல்பாக மூச்சு விட முடியாத சூழல் ஏற்படக் கூடும். இந்நிலையில் காற்று மாசு அதிகமானதால் பள்ளிகளுக்கு மேலும் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்தது டெல்லி அரசு. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory