» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தின் காவல் 27ஆம் தேதி வரை நீட்டிப்பு

புதன் 13, நவம்பர் 2019 7:34:39 PM (IST)

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாச்; மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் வரும் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21ந்தேதி கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு, உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் கடந்த 21ந்தேதி ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே, இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ப. சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கடந்த மாதம் 16-ஆம் தேதி திஹார் சிறையில் கைது செய்தது.  தொடர்ந்து அவரது காவலை நீட்டிக்க கோரி கடந்த மாதம் 24-ஆம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க துறை முறையீடு செய்திருந்தது. அதன்படி அவரது காவலை அக்டோபர் 30-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி அஜய்குமார் குஹர் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி காவல்முடிவடைந்த நிலையில், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் ப. சிதம்பரம் 30-ஆம் தேதியன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ப. சிதம்பரத்தின் காவலை மேலும் ஒரு நாள் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அமலாக்க துறையின் கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது. பின்னர் ப. சிதம்பரத்திற்கு நவம்பர் 13ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  

அதேசமயம் தில்லி திகார் சிறையில் ப. சிதம்பரத்திற்கு சிறையில் சிறப்பு சலுகை வழங்க அனுமதியும்  வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி ப. சிதம்பரத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு தனி சிறை வசதி கொடுக்கலாம்.  3 வேளை வீட்டு உணவு வழங்கவும், போதிய மருத்துவ வசதி மற்றும் மேற்கத்திய கழிவறை வசதி வழங்கவும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் நவம்பர் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory