» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதன் 13, நவம்பர் 2019 5:15:53 PM (IST)

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) வரம்பிற்குள் நாட்டின் தலைமை நீதிபதி அலுவலமும் வரும் என 2010ல் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்ற செயலாளர் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் ஆர்டிஐ சட்ட வரம்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஆர்டிஐ சட்ட வரம்பில் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி உள்ளட்ட 3 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். தலைமை நீதிபதி அலுவலகமும் வெளிப்படைத் தன்மை கொண்டது என்பதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 2005ல் பிறப்பிக்கப்பட்ட சட்டத்தில், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஆர்டிஐ வரம்பிற்குள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory