» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலை மகரவிளக்கு பூஜை 16-ம் தேதி தொடக்கம்: பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் போலீசார்

புதன் 13, நவம்பர் 2019 3:59:36 PM (IST)

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு வழிபாடு பூஜை நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கவுள்ளதால், விழா முடியும் வரை சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மொத்தம் 10,017 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு வழிபாடு, மண்டல பூஜை விழாவுக்காக நவம்பர் 16-ஆம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை செல்லும் பக்தா்கள் நவம்பர் 17 ஆம் தேதி மாலை அணிந்து விரதம் தொடங்க உள்ளனா். சபரிமலை கோயிலில் கார்த்திகை முதல் தேதியில் இருந்து 41 நாள்களுக்கும் தொடா்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் இடம்பெறும். அதிகாலையில் நிர்மால்ய பூஜை, சந்தன, நெய் அபிஷேகம் லட்சார்ச்சனை, படிபூஜை உள்ளிட்டவை தொடா்ந்து நடைபெறும். மண்டல பூஜை டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெறும்.

மண்டல கால பூஜைக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வருவதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கான செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேரள காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சபரிமலை மண்டல கால பூஜை நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கவுள்ளதால், விழா முடியும் வரை சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மொத்தம் 24 எஸ்.பி.க்கள் தலைமையில் 112 துணை எஸ்.பி.க்கள், 264 இன்ஸ்பெக்டர்கள், 1,185 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 307 மகளிர் போலீசார் உட்பட 10,017 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நவம்பர் 15-ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக பாதுகாப்புப் பணிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory