» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அயோத்தி வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து

சனி 9, நவம்பர் 2019 3:22:51 PM (IST)

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்பது வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து  நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்பது வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு. இது இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தை மேலும் பலப்படுத்தும். மக்கள் இந்தத் தீர்ப்பை சமநிலையுடன், அமைதியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். மத நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory