» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தீர்ப்பின் முழு விவரத்தை படித்தப்பின் சீராய்வு மனு தாக்கல் : சன்னி வக்பு வாரியம்

சனி 9, நவம்பர் 2019 12:22:30 PM (IST)

அயோத்தி வழக்கில் தீர்ப்பின் முழு விவரத்தை படித்தப்பின் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர் கூறினார். 

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  தீர்ப்பை வாசித்தார். சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அயோத்தி தீர்ப்பு குறித்து அனைத்து முஸ்லீம் சட்டவாரிய அமைப்பின் பிரதிநிதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது சன்னி வஃக்பு வாரிய வழக்கறிஞர் சஃபரியாஃப் ஜிலானி கூறியதாவது:-அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு திருப்தியில்லை. தீர்ப்பை யாருடைய வெற்றி தோல்வியாக கருதக்கூடாது.  உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அனைத்து கருத்துக்களையும் நாங்கள் மறுக்கவில்லை. தீர்ப்புக்கு எதிராக எங்கும் எந்த போராட்டமும் நடத்தக்கூடாது. தீர்ப்பு குறித்து உரிய ஆலோசனைக்குப் பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தீர்ப்பின் முழு விவரத்தை படித்தப்பின் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory