» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோவையில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதி!!

வியாழன் 7, நவம்பர் 2019 12:34:55 PM (IST)

கோவையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனையை உச்சநீதிமன்றம்  உறுதி செய்தது.

கோவையை சேர்ந்த துணிக்கடை அதிபர் ஒருவரின் 10 வயது மகள், 7 வயது மகன் ஆகியோர் 2010-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி பள்ளிக்கு சென்றபோது கார் டிரைவர் மோகன்ராஜ் மற்றும் அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோரால் கடத்தி கொல்லப்பட்டனர். சிறுமியை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த இரட்டை கொலை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மோகன்ராஜ் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது நடைபெற்ற என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி இரட்டைத் தூக்கு மற்றும் 3 ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மனோகரன் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டில்  சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதை தொடர்ந்து  மனோகரன் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் மனோகரனுக்கு மரண தண்டனையை உச்சநீதிமன்றம்  உறுதி செய்து உள்ளது. மனோகரனின் சீராய்வு மனு தள்ளுபடி  செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory