» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அனைத்து அரசுப் பள்ளிகளும் ஆங்கில வழிக்கல்விக்கு மாற்றம்: ஆந்திர அரசு அதிரடி முடிவு

வியாழன் 7, நவம்பர் 2019 11:24:06 AM (IST)

ஆந்திராவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: ஆந்திரப் பிரதேச பள்ளிக் கல்வித்துறை, அனைத்து அரசுப் பள்ளிகள், மண்டல் ப்ரஜா பரிஷத், ஜில்லா பரிஷத் பள்ளிகளில் உள்ள வகுப்புகளை ஆங்கில வழிக் கல்விக்கு மாற்ற முடிவெடுத்துள்ளது. இதன்படி 2020- 2021 ஆம் கல்வியாண்டில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரையும் 2021 - 2022 ஆம் கல்வியாண்டு முதல் 9, 10-ம் வகுப்புகளுக்கும் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு அரசு பிரத்யேக அதிகாரங்களை வழங்கியுள்ளதுa. அதன்படி 5 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தெலுங்கு, உருது மீடியங்களுக்கு இணையாக ஆங்கில மீடிய வகுப்புகளையும் தொடங்கலாம்.இதற்காக ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சிகள் வழங்கப்படும். ஆங்கிலப் புலமை பரிசோதிக்கப்பட்டு புதிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அதே நேரத்தில், தெலுங்கு அல்லது உருது கட்டாயப் பாடமாக அமைக்கப்பட வேண்டும். அரசாணைக்கு இணங்க, ஆங்கில மொழிக் கற்பித்தல் மையங்களும் மாவட்ட ஆங்கில மையங்களும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory