» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம் 5 கிலோ எடை இழந்துவிட்டார்: கபில் சிபல் வேதனை

சனி 19, அக்டோபர் 2019 3:57:16 PM (IST)

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், 5 கிலோ எடையை இழந்துள்ளார் என்று அவரது வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வேதனைதெரிவித்தார். 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடா்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம், அவரது மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான காா்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற அனுமதி அளித்ததில், ப.சிதம்பரம் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், குற்றச் செயல்களின் மூலம் அரசு கருவூலத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்திய தண்டனையியல் சட்டத்தின் 120-பி (குற்றச்சதி), 420 (மோசடி), 471 (மோசடியான ஆவணங்கள் பயன்பாடு) உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றங்கள், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக் கூடியவை ஆகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory