» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அபராதம் வசூலிக்கும் நோக்கில் வாகன ஓட்டிகளை குறிவைக்கக் கூடாது : யோகி ஆதித்யநாத்

புதன் 16, அக்டோபர் 2019 5:38:58 PM (IST)

காவல்துறையினர் அபராதம் வசூலிக்கும் நோக்கில் வாகன ஓட்டிகளை குறிவைக்கக் கூடாது, என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.  

சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், போக்குவரத்துத் துறை பாராட்டத்தக்க வகையில் தனது பணியினைச் சிறப்பாகச் செய்து வருகிறது. காவல்துறையினர் அபராதம் வசூலிக்கும் நோக்கில் வாகன ஓட்டிகளை குறிவைக்கக் கூடாது, மாறாக வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ய வேண்டும். பள்ளியிலும் குழந்தைகளுக்கு சாலை விதிமுறைகள் குறித்து கற்பிக்க வேண்டியது அவசியம். இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும்; நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட்களைப் பயன்படுத்த வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். மக்களின் ஆதரவு இன்றி இந்த முயற்சிகள் வெற்றி பெறாது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளுக்கென பாடத்திட்டம் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று பேசினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory