» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிறையில் இருந்து சசிகலா ஷாப்பிங் சென்ற விவகாரம்: தடயவியல் ஆய்வுக்கு வீடியோ அனுப்பப்பட்டது

வியாழன் 10, அக்டோபர் 2019 5:13:48 PM (IST)

சிறையில் இருந்து சசிகலா ஷாப்பிங் சென்ற விவகாரம் தொடர்பாக வீடியோ தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா ஷாப்பிங் சென்று வந்ததாக கடந்த ஆண்டு வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சிறையில் அவருக்கு சலுகைகள்  செய்து கொடுக்க அப்போதைய சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சத்யநாராயணா ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதாக போலீஸ் அதிகாரி ரூபா குற்றம் சாட்டி இருந்தார். வீடியோ ஆதாரங்களையும், சிறையில் சசிகலா அறையில் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட மசாலா பொருட்கள் மற்றும் அவருக்கு ஒதுக்கப்பட்ட தனி அறை குறித்த விவரங்களையும் ஆதாரமாக சேகரித்து கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசாரிடம் ரூபா புகார் கொடுத்தார்.

இந்த விவகாரம் குறித்து சத்ய நாராயணா, ரூபா, கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி ஆகியோரிடம் கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர். விரைவில் சசிகலா மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். சசிகலா ஷாப்பிங் சென்று வந்த வீடியோ உண்மையானது தானா? என்பது  குறித்து தடயவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளனர். அது உண்மையான வீடியோவா? அல்லது மார்பிங் செய்யப்பட்டதா? என்பதை அறியும் தடயவியல் ஆய்வகம் கேரளாவில் மட்டுமே உள்ளது. இதனால் கேரள தடயவியல் துறைக்கு அந்த வீடியோவை கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் அனுப்பி உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory