» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பி.எம்.சி வங்கி நிதி வைப்பாளர்களுக்காக ஆர்பிஐ ஆளுநருடன் பேச்சு: நிர்மலா சீதாராமன் உறுதி

வியாழன் 10, அக்டோபர் 2019 4:13:20 PM (IST)

பி.எம்.சி வங்கி நிதி வைப்பாளர்களுக்காக ரிசர்வ் வங்கியின் ஆளுநருடன் பேசுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்து உள்ளார்.

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியிடம் இருந்து பெற்ற சுமார் 6,500 கோடி ரூபாய் கடனை எச்.டி.ஐ.எல். நிறுவனம் மோசடி செய்து விட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்நிறுவனத்தின் தலைவரையும், அவரது மகனையும் கைது செய்தனர். இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பி.எம்.சி. வங்கி செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் அந்த வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்.களில் பணம் எடுக்க முடியாது என்ற கட்டுப்பாடு தான் பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் கோபம் அடைந்துள்ள பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் மும்பையில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் வைப்புத் தொகையாளர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்   ரிசர்வ் வங்கி ஆளுநரிடம்  மீண்டும் இந்த் விவகாரததை  கூறுவதாக உறுதியளித்தார். பல மாநில கூட்டுறவு வங்கிகள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


மக்கள் கருத்து

e murukanOct 11, 2019 - 12:06:22 PM | Posted IP 162.1*****

bsnloppanthaooliyarkalukku8mathasambalamillay

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory