» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாலிசிதாரர்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது: வதந்திகள் குறித்து எல்.ஐ.சி. விளக்கம்

வியாழன் 10, அக்டோபர் 2019 11:27:02 AM (IST)

பாலிசிதாரர்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது என சமூகவலைத்தளங்களில் பரவிய தகவலுக்கு எல்.ஐ.சி. விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. கடும்நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், லட்சக்கணக்கான பாலிசிதாரர்களின் பணம் பாதுகாப்பாக இல்லை என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு எல்.ஐ.சி. நிறுவனம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘எல்.ஐ.சி. தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வெளியான தகவல்கள் பொய்யானவை. அடிப்படை ஆதாரம் இல்லாதவை. எல்.ஐ.சி.யின் நிதி ஆதாரம் நன்றாக உள்ளது. நிதி நெருக்கடி எதுவும் இல்லை. லட்சக்கணக்கான பாலிசிதாரர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது. சமூகவலைத்தளங்களில் வெளியான வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்’ என்று கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

AanandOct 10, 2019 - 07:09:58 PM | Posted IP 162.1*****

Please dont doubt LIC..... Its fund was used to Industrialise India.... Dont believe rumours...

ஆசீர். விOct 10, 2019 - 12:58:21 PM | Posted IP 162.1*****

ரெண்டு நாளாக எல் ஐ சி வெப்சைட் இயங்கவில்லையே ஏன்??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory