» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வேறு நெட்வோர்க்கிற்கு கால் செய்தால் கட்டணம்: ஜியோ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

வியாழன் 10, அக்டோபர் 2019 11:21:28 AM (IST)

ஜியோ எண்ணிலிருந்து, வேறு நிறுவன எண்ணிற்கு அழைத்தால் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ நெட்வொர்க் அனைத்தும் இலவசம் என்ற பெயரில் ரிலையன்ஸ் நிறுவனத்தால் சில வருடங்களுக்கு முன்னாள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அளவுக்கு அதிகமான டேட்டா, அன்லிமிட்டட் கால்கள் போன்றவைகளை குறிப்பிட்ட தொகைக்குள் வழங்க, மற்ற நிறுவனங்களின் வளர்ச்சி மெல்ல மெல்ல பாதிக்க துவங்கியது. அதே நேரத்தில் ஜியோவில் இணையும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றது.

இந்நிலையில் டிராயின் புது விதிப்படி, ஜியோ எண்ணிலிருந்து வேறு நெட்வோர்க்கிற்கு கால் செய்தால் இனி நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கால் செய்வதற்கு என இனி 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தனியாக ரிசார்ஜ் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு பதில் கூடுதலாக இலவச டேட்டா வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இலவச அவுட் கோயிங் வசதியை செய்து கொடுப்பதற்காக கடந்த 3 ஆண்டுகளில் மற்ற நிறுவனங்களுக்கு (இண்டெர்கனைக்ட் யூசேஜ் சார்ஜ்) என்று ரூ.13 ஆயிரத்து 500 கோடியை செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து

அருண்Oct 11, 2019 - 02:06:24 AM | Posted IP 27.62*****

பிஸினஸ் ட்ரிக்ஸ் இதெல்லாம்.

rajaOct 11, 2019 - 12:59:17 AM | Posted IP 173.2*****

jio new plan ok, before some other network high rate plan, that time we wasted money for phone calls and mobile data... now data is very cheepafter jio network launched... now all network slashing this rate....

தமிழ்ச்செல்வன்Oct 10, 2019 - 11:46:09 AM | Posted IP 162.1*****

ஆடு வளர்ப்பது அழகு பார்ப்பதற்கு அல்ல, கோழி வளர்ப்பது கொஞ்சுவதற்கு அல்ல என்பது இப்போதுதான் புரிகிறது.

ஒருவன்Oct 10, 2019 - 11:32:11 AM | Posted IP 173.2*****

வடை நாட்டு குஜராதிகாரன் நாட்டையும் , பணத்தையும் ஆட்டை போட்டுடுவான், மக்களே JIO சிம் பயன்படுத்துவதை தவிர்க்கவும் , BSNL பயன்படுத்துங்கள் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory