» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய விமானப்படை தினம்: முப்படை தளபதிகள் மரியாதை - பிரதமர் மோடி வாழ்த்து

செவ்வாய் 8, அக்டோபர் 2019 10:28:41 AM (IST)

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டில் இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதனை அடுத்து புதுடெல்லியில் உள்ள காஜியாபாத் அருகே ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 8-ந்தேதி இந்திய விமானப்படை  தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 87-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

புதுடெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், இந்திய விமானப்படை தலைமை தளபதி ஆர்.கே. சிங் பதவுரியா மற்றும் இந்திய கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங் ஆகிய முப்படைகளின் தளபதிகள் இன்று மலர்வளையம் வைத்து வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில்,  இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நமது பெருமைமிகு தேசம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது. இந்திய விமானப்படை மிகுந்த அர்ப்பணிப்புடனும், சிறப்புடனும் இந்தியாவுக்கு தொடர்ந்து சேவை ஆற்றும் என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory