» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புளிக்கு ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கம், கிரைண்டருக்கு வரி குறைப்பு : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சனி 21, செப்டம்பர் 2019 12:41:14 PM (IST)

உலர்ந்த புளிக்கு ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. கிரைண்டருக்கு  வரி குறைக்கப்பட்டுள்ளது.

அனைத்து துறையினரின் எதிர்பார்ப்புகளுக்கிடையே அதிகாரமிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது.   மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 37-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கோவாவில் இன்று நடைபெற்றது. மந்த நிலை கண்டுள்ள பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், அதேநேரம், வருவாய் நிலையை கருத்தில் கொண்டும் சரக்கு மற்றும் சேவை வரிகளை சீரமைப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தாவது பின்வருமாறு: வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% இல் இருந்து 5% ஆக குறைப்பு. ஹோட்டலில் தினவாடகை ரூ.1000-க்கு குறைவாக இருந்தால் ஜிஎஸ்டி கிடையாது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் உலர்ந்த புளிக்கு ஜிஎஸ்டி வரி முற்றிலும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory